திருத்தணிகை
திருத்தணிகை
தனன தத்தன தத்தன தத்தனதனன தத்தன தத்தன தத்தனதனன தத்தன தத்தன தத்தன ...... தனதானபழமை செப்பிய ழைத்தித மித்துடன்முறைம சக்கிய ணைத்துந கக்குறிபடஅ ழுத்திமு கத்தைமு கத்துற ...... வுறவாடிப்பதறி யெச்சிலை யிட்டும ருத்திடுவிரவு குத்திர வித்தைவி ளைப்பவர்பலவி தத்திலு மற்பரெ னச்சொலு ...... மடமாதர்அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்தியஅசட னைப்பழி யுற்றஅ வத்தனைஅடைவு கெட்டபு ரட்டனை முட்டனை ...... அடியேனைஅகில சத்தியு மெட்டுறு சித்தியுமெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படுமருண பொற்பத முற்றிட வைப்பது ...... மொருநாளேகுழவி ழிப்பெரு நெட்டல கைத்திரள்கரண மிட்டுந டித்தமி தப்படுகுலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு ...... மொருசூரன்குருதி கக்கிய திர்த்துவி ழப்பொருநிசிச ரப்படை பொட்டெழ விக்ரமகுலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித ...... மயில்வீராதழையு டுத்தகு றத்திப தத்துணைவருடி வட்டமு கத்தில தக்குறிதடவி வெற்றிக தித்தமு லைக்குவ ...... டதன்மீதேதரள பொற்பணி கச்சுவி சித்திருகுழைதி ருத்திய ருத்திமி குத்திடுதணிம லைச்சிக ரத்திடை யுற்றருள் ...... பெருமாளே.
திருத்தணிகை
Thiruthani