பதிகம் 655 · தேவாரம் · திருஞானசம்பந்தர் · திருநாவுக்கரசர் · சுந்தரர்

திருவலம்புரம் – திருத்தாண்டகம்௿ · 6.58

1. மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை ௿ மறையவனும் வானவருஞ் சூழ நின்று௿ கண்மலிந்த திருநெற்றி யுடையா ரொற்றைக் ௿ கதநாகங் கையுடையார் காணீ ரன்றே௿ பண்மலிந்த மொழியவரு மியானு மெல்லாம் ௿ பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல௿ மண்மலிந்த வயல்புடைசூழ் மாட வீதி ௿ வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.2. சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த ௿ தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்௿ கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்௿ கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல௿ கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்௿ கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல்௿ மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம் ௿ வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.3. தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை ௿ யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்௿ ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல௿ அருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்௿ நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந்௿ துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி௿ வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி௿ வலம்புரமே புக்கிங்கே மன்னி னாரே.4. மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி ௿ மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்௿ கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த ௿ குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே௿ போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்௿ புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ௿ வாவா வெனவுரைத்து மாயம் பேசி௿ வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.5. அனலொருகை யதுவேந்தி அதளி னோடே ௿ ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்௿ புனல்பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல் மேனிப் ௿ புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்௿ சினவிடையை மேற்கொண்டு திருவா ரூருஞ்௿ சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல௿ மனமுருக வளைகழல மாயம் பேசி௿ வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.6. கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் ௿ காலினாற் காய்ந்துகந்த காபா லியார்௿ முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி௿ முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்௿ தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச் ௿ சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ௿ மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி௿ வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.7. பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம் ௿ பசுஞ்சாந்தங் கொண்டணிந்து பாதம் நோவ௿ இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க் ௿ கெவ்வூரீர் எம்பெருமா னென்றேன் ஆவி௿ விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி௿ வேறோர் பதிபுகப் போவார் போல௿ வட்டணைகள் படநடந்து மாயம் பேசி௿ வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.8. பல்லார் பயில்பழனப் பாசூ ரென்றும்௿ பழனம் பதிபழமை சொல்லி நின்றார்௿ நல்லார் நனிபள்ளி யின்று வைகி௿ நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்௿ சொல்லார் ஒருவிடமாத் தோள்கை வீசிச்௿ சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கும்௿ மல்லார் வயல்புடைசூழ் மாடவீதி ௿ வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.9. பொங்கா டரவொன்று கையிற் கொண்டு௿ போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர்௿ தங்கா ரொருவிடத்துந் தம்மேல் ஆர்வந் ௿ தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்௿ எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வா௿ என்கண்ணில் நின்றகலா வேடங் காட்டி௿ மங்குல் மதிதவழும் மாட வீதி ௿ வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.10. செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ் ௿ சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்௿ பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற ௿ போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ௿ அங்கொருதன் றிருவிரலால் இறையே யூன்றி௿ அடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்௿ வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி ௿ வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
பகிர்