பதிகம் 678 · தேவாரம் · திருஞானசம்பந்தர் · திருநாவுக்கரசர் · சுந்தரர்

திருக்கோடிகா – திருத்தாண்டகம்௿ · 6.81

1. கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்௿ கன்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்௿ மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய் ௿ மதிற்கச்சி யேகம்ப மேயான் கண்டாய்௿ விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்௿ மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்௿ கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்௿ கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.2. வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்௿ மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்௿ பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்௿ பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்௿ செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்௿ திருவாரூர்த் திருமூலத் தானன் கண்டாய்௿ கொண்டாடு மடியவர்தம் மனத்தான் கண்டாய்௿ கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.3. அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்௿ அடியார்கட் காரமுத மானான் கண்டாய்௿ மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்௿ வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்௿ இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய்௿ ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய்௿ கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்௿ கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.4. மற்றாருந் தன்னொப்பா ரில்லான் கண்டாய்௿ மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்௿ புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய்௿ பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய்௿ அற்றார்கட் கற்றானாய் நின்றான் கண்டாய்௿ ஐயா றகலாத ஐயன் கண்டாய்௿ குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய்௿ கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.5. வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்௿ மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்௿ போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்௿ புகலூரை யகலாத புனிதன் கண்டாய்௿ நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்௿ நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்௿ கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்௿ கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.6. கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்௿ கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்௿ படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய்௿ பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்௿ அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்௿ அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்௿ கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்௿ கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.7. உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்௿ ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய்௿ கழையாடு கழுக்குன்ற மமர்ந்தான் கண்டாய்௿ காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய்௿ இழையாடு மெண்புயத்த இறைவன் கண்டாய்௿ என்னெஞ்சத் துள்நீங்கா எம்மான் கண்டாய்௿ குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்௿ கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.8. படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய்௿ பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்௿ நடமாடி ஏழுலகுந் திரிவான் கண்டாய்௿ நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்௿ கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்௿ கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்௿ குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்௿ கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
பகிர்