ராகம்: அடாணா
ராகம்: அடாணா
நின்னையே நான்வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீவந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீபகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பாபகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றாய்பழனியில் நீயும் பழம்ஜோதி யானாய் நீபிரம்மனுக் கருளியவா ப்ரணவப் பொருளோனேபிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய்பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீகுன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியேபிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்பிறவாமை என்கிற பெருவரம் நீ தந்திடுவாய்தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்சரணம டைந்திட்டேன் சடுதியில் வாருமேசரவண பவனே சரவண பவனேஉன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
உன்னையே நாள்தோறும் வேண்டி ஏத்துகிறேன்; மெய்யறிவாக வந்து இவனுள் மருவிடு. பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கிறாய், பழனியில் பழம்ஜோதியாய் நிற்கிறாய், பிரம்மனுக்குப் ப்ரணவப் பொருளை அருளியவனே, பிறவா வரம் தந்து ப்ரம்மமயமாக்கு. திருச்செந்தூரில் சக்திவேல் தாங்கி, பழமுதிர்சோலையில் பரஞ்ஜோதியாய், சுவாமிமலையில் சிவஸ்வாமிக்கு அருளி, குன்றுதோறும் குருவாய் அமர்ந்தவனே, பிறப்பு இறப்பைப் பெயர்த்து, தத்துவக் குப்பையை மறக்கச் செய்து, உயிருக்குயிராகி என்னை உன்னில் கரைத்திடு.
You alone I desire and praise each day; come as true knowledge and dwell in me. Kandan of clear wisdom, you are at Parankunram; at Pazhani you are the ancient light; you taught the meaning of the pranava to Brahma — grant birthlessness and make me brahman. Holding the vel of power at Thiruchendur, the supreme light at Pazhamudircholai, teaching Shiva himself at Swamimalai, sitting as guru on every hill: lift me out of birth and death, make me forget the heap of doctrines, become the life of my life, and melt me into you.
தலம் தோறும் முருகன் ஆற்றிய தொழிலை நினைவூட்டி, 'பிறவாமை' என்ற பெருவரத்தைக் கேட்கும் பாடல்.
It recalls what Murugan did at each shrine and asks for the great boon of no rebirth.
ராகம்: அடாணா
Raga: அடாணா