verse 7 · Sri Kandha Guru Kavacham · Sri Santhananda Swamigal

கந்தகுரு கவசம் 7 · ஷண்முகப்ரியா

ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்குதிருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டுகிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்தென்திசையிலு மென்னைத் திருவருளால் காப்பாற்றும்தென்மேற்கிலு மென்னைத் திறன்வேலால் காப்பாற்றும்மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரக்ஷ¢ப்பாய்வடமேற்கிலு மென்னை மயிலோனே ரக்ஷ¢ப்பாய்வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
Share

பொருள்

ஸ்கந்த குருநாதா, கதறுகிறேன் கேள்; உன் தாளைப் பிடித்தேன், வரம் தா. திருவருட் சக்தியைத் தந்து ஆட்கொண்டு, சத்ரு பகைவரை ஒழித்திடு. கிழக்கிலிருந்து கிருபாகரா, தென்கிழக்கிலிருந்து தீனபந்து, தெற்கிலிருந்து திருவருளால், தென்மேற்கிலிருந்து திறன்வேலால், மேற்கில் மால்மருகா, வடமேற்கில் மயிலோன், வடக்கில் சத்குருவாய், வடகிழக்கில் மயில்மீது — எட்டுத் திசைகளிலும் வந்து காப்பாற்று.

Meaning

Lord Skanda Guru, I cry out, hear me; I have caught your feet — give me the boon. Grant the power of grace, take me, and destroy my enemies. From the east, O merciful; from the south-east, O friend of the poor; from the south by your grace; from the south-west by your strong vel; from the west, kinsman of Vishnu; from the north-west, rider of the peacock; from the north as the true guru; from the north-east on your peacock — come and guard me in all eight directions.

சொற்பொருள் Word by word

திருவருட் சக்தி
the power of grace
தீனபந்து
friend of the helpless
திறன்வேல்
the capable vel
எட்டுத்திசை
the eight directions

விளக்கம்

திசைக்கு ஒரு திருநாமம் கொடுத்து எட்டுத் திசைகளையும் காக்கச் சொல்வது கவச மரபின் இன்னொரு வடிவம்.

Explanation

Giving each direction its own name of the lord, it asks for protection on all eight sides — another classic kavacham form.

கதை

ராகம்: ஷண்முகப்ரியா

ராகம்: ஷண்முகப்ரியா

A story

Raga: ஷண்முகப்ரியா