ராகம்: கல்யாணி
ராகம்: கல்யாணி
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவாஜகத்குரோ சிவகுமரா சித்தமல மகற்றிடுவாய்செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய்குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பாகுமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பாபவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பாவிராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பாவயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரேவெண்ணை மலைமுருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்கதிர்க்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர்கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்குமரமலை குருநாதா கவலையெல்லாம் போக்கிடுவீர்வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்வடபழனியாண்டனே வல்வினைகள் போக்கிடுவீர்ஏழுமலை யாண்டவனே எத்திக்கும் காத்திடுவீர்ஏழ்மை யகற்றி கந்தா எமபயம் போக்கிடுவீர்அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்ஆறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்குபணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன்அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாய்
திருச்செந்தூர் ஷண்முகனே, ஜகத்குருவாக அருளியவனே, சித்தமலம் அகற்றி, சிவானுபூதி தந்து, ஜீவனைச் சிவனாக்குவாய். குன்றக்குடி, குமரகிரி, பச்சைமலை, பவழமலை, விராலிமலை, வயலூர், வெண்ணைமலை, கதிர்காமம், காந்தமலை, மயிலம், கஞ்சமலை, குமரமலை, வள்ளிமலை, வடபழனி, ஏழுமலை ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் முருகா, மனமாயையை அகற்றி, ஏழ்மையையும் எமபயத்தையும் போக்கி, மயிலேறி வந்து அருள்வாய். பணிவதே என் பணி என்று சொன்னாய்; பணிந்தேன்.
Six-faced lord of Thiruchendur, who granted the state of world-guru: remove the impurity of the mind, give the experience of Shiva, make this soul Shiva. Murugan of Kundrakudi, Kumarakiri, Pachai malai, Pavazha malai, Virali malai, Vayalur, Vennai malai, Kathirgamam, Kanthamalai, Mayilam, Kanjamalai, Kumara malai, Valli malai, Vadapazhani and Ezhu malai: take away the mind's maya, drive off poverty and the fear of death, and come riding the peacock. You told me that bowing is my work; I have bowed.
தலங்களின் பெயர்களை அடுக்கிப் பாடுவது இந்நூலின் வழக்கம்; இங்கே 'ஜீவனைச் சிவனாக்கு' என்பது மைய வேண்டுதல்.
Naming shrine after shrine is this hymn's habit; here the central request is to make the soul Shiva.
ராகம்: கல்யாணி
Raga: கல்யாணி