ராகம்: காம்போதி
ராகம்: காம்போதி
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால்விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரேநடுனெற்றித் தானத்து நானுனைத் த்யானிப்பேன்ப்ரம்ம மந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்சிவயோகி யாகஎனைச் செய்திடும் குருநாதாஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோகொல்லிமலை மேலே குமரகுரு வானவனேகஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதாகருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோமருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோசென்னிமலைக் குமரா சித்தர்க் கருள்வோனேசிவவாக்கிய சித்தருனைச் சிவன் மலையில் போற்றுவரேபழனியில் போகருமே பாரோர்வாழப் ப்ரதிஷ்டித்தான்புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோகொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதாகள்ளம் கபடமற்ற வெள்ளையுள்ளம் அருள்வீரேகற்றவர்க ளோடென்னைக் களிப்புறச் செய்திடுமேஉலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம்ஸ்கந்தகிரி என்பதை நான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
உன் அருளால் நன்கறிந்து கொண்டேன்; இனி விட்டிட மாட்டேன் கந்தா, வீடு தாரும். நடு நெற்றியில் உன்னைத் தியானிப்பேன்; பிரம்ம மந்திரத்தைப் போதித்து வா. சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டி, சிவயோகியாக்கி, ஆசை அறுத்து அரனடியைக் காட்டி, மெய்யடியாராக்கி மெய்வீட்டில் இருத்து. கொங்கு நாட்டில் கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ, கொல்லிமலை, கஞ்சமலை, கருவூர், மருதமலை, சென்னிமலை, சிவவாக்கியர், போகர், புலிப்பாணி ஆகிய சித்தர்கள் போற்றும் குமரகுரோ, கள்ளமற்ற வெள்ளையுள்ளம் தந்து, கற்றவரோடு களிப்புறச் செய். உலகெங்கும் நிறைந்திருந்தும் உள்ள இடம் ஸ்கந்தகிரி என்பதைக் கண்டுகொண்டேன்.
By your grace I have known it well; I will not let go now, Kandan — give me release. I will meditate on you at the brow's centre; come and teach me the mantra of brahman. Show the light along the sushumna, make me a yogi of Shiva, cut off desire, show me the feet of the Lord, make me a true devotee and set me in the true home. Lord of Skandagiri who holds a temple in the Kongu country; Kumara Guru praised by the siddhas of Kolli hill, Kanja hill, Karur, Marudhamalai, Chennimalai, Sivavakkiyar, Bogar and Pulippani: give me a heart white without deceit, and let me rejoice with the learned. Filling all the world, your dwelling place is Skandagiri — this I have found.
சுழுமுனை, நடுநெற்றி, பிரம்ம மந்திரம் — குண்டலினி யோகத்தின் சொற்களில் பாடும் பாடல்; கொங்கு நாட்டுச் சித்தர்களை நினைவூட்டுகிறது.
Sushumna, the brow centre, the mantra of brahman: this song speaks in the language of kundalini yoga and names the siddhas of the Kongu country.
ராகம்: காம்போதி
Raga: காம்போதி