poem 66 · Akananuru · Many poets

அகநானூறு 66 · மருதம் · செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

இம்மை யுலகத் திசையொடும் விளங்கிமறுமை யுலகமும் மறுவின் றெய்துபசெறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச்சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப்பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்வாயே யாகுதல் வாய்த்தனம் தோழிநிரைதார் மார்பன் நெருல் ஒருத்தியொடுவதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்மாண்டொழின் மாமணி கறங்கக் கடைகழிந்துகாண்டல் விருப்பொடு தளர்புதளர் போடும்பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர்தாங்குமதி வலவஎன் றிழிந்தனன் தாங்காதுமணிபுரை செவ்வாய் மார்பகஞ் சிவணப்புல்லிப் பெரும செல்லினி அகத்தெனக்கொடுப்போற் கொல்லான் கலுழ்தலின் தடுத்தமாநிதிக் கிழவனும் போன்மென மகனொடுதானே புகுதந் தோனே யானதுபடுத்தனென் ஆகுதல் நாணி இடித்திவன்கலக்கினன் போலுமிக் கொடியோன் எனச்சென்றலைக்குங் கோலொடு குறுகத் தலைக்கொண்டிமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப்பயிர்வன போலவந் திசைப்பவும் தவிரான்கழங்கா டாயத் தன்றுநம் அருளியபழங்கண் ணோட்டமும் நலியஅழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே.

Immai yulakath thisaiyotum vilangki / Marumai yulakamum maruvin reythupa / Serunarum vizhaiyunj seyirtheer kaatsis / Siruvarp payantha semma loarenap / Palloar kooriya pazhamozhi ellaam / Vaayae yaakuthal vaayththanam thoazhi / Niraithaar maarpan nerul oruththiyotu / Vathuvai ayarthal vaentip puthuvathin / Iyanra aniyan iththeru irappoan / Maantozhin maamani karangkak kataikazhinthu / Kaantal viruppotu thalarputhalar poatum / Poongkat puthalvanai noakki netunthaer / Thaangkumathi valavaen rizhinthanan thaangkaathu / Manipurai sevvaay maarpakanj sivanap / Pullip peruma sellini akaththenak / Kotuppoar kollaan kaluzhthalin thatuththa / Maanithik kizhavanum poanmena makanotu / Thaanae pukuthan thoanae yaanathu / Patuththanen aakuthal naani itiththivan / Kalakkinan poalumik kotiyoan enassen / Ralaikkung koalotu kurukath thalaikkon / Timizhkan muzhavin inseer avarmanaip / Payirvana poalavan thisaippavum thaviraan / Kazhangkaa taayath thanrunam aruliya / Pazhangkan noattamum naliya / Azhungkinan allanoa ayarnthathan mananae.

Share
கதை

மருதம் · செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப்புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. · செல்லூர்க் கோசிகன் கண்ணனார் பாடியது