poem 378 · Akananuru · Many poets

அகநானூறு 378 · குறிஞ்சி · காவட்டனார்

நிதியந் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின்வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொளவங்கூழ் ஆட்டிய அங்குழை வேங்கைநன்பொன் அன்ன நறுந்தாது உதிரக்காமர் பீலி ஆய்மயிற் றோகைவேறுவே றினத்த வரைவாழ வருடைக்கோடுமுற் றிளந்தகர் பாடுவிறந் தியலஆடுகள வயிரின் இனிய ஆலிப்பசும்புற மென்சீர் ஒசிய விசம்புகந்துஇருங்கண் ஆடமைத் தயங்க இருக்கும்பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும்வடந்தை தூக்கும் வருபனி அற்சிரம்சுடர்கெழு மண்டிலம் மழுங்க ஞாயிறுகுடகடல் சேரும் படர்கூர் மாலையும்அனைத்தும் அடூஉநின்று 1நலிய நீமற்றுயாங்ஙனம் வாழ்தி என்றி தோழிநீங்கா வஞ்சினஞ் செய்துநத் துறந்தோர்அள்ளிலைப் பலவின் கனிகவர் கையகல்லா மந்தி கடுவனோ டுகளுங்கடுந்திறல் அணங்கின் நெடும்பெருங் குன்றத்துப்வான்றோய் சிமையம் தோன்ற லானே.

Nithiyan thunjum nivanthoangku varaippin / Vathuvai makalir koonthal kamazhkola / Vangkoozh aattiya angkuzhai vaengkai / Nanpon anna narunthaathu uthirak / Kaamar peeli aaymayir roakai / Vaeruvae rinaththa varaivaazha varutaik / Koatumur rilanthakar paatuviran thiyala / Aatukala vayirin iniya aalip / Pasumpura menseer osiya visampukanthu / Irungkan aatamaith thayangka irukkum / Perungkal naatan pirintha pulampum / Vatanthai thookkum varupani arsiram / Sutarkezhu mantilam mazhungka njaayiru / Kutakatal saerum patarkoor maalaiyum / Anaiththum atoouninru 1naliya neemarru / Yaangnganam vaazhthi enri thoazhi / Neengkaa vanjinanj seythunath thuranthoar / Allilaip palavin kanikavar kaiya / Kallaa manthi katuvanoa tukalung / Katunthiral anangkin netumperung kunraththup / Vaanroay simaiyam thoanra laanae.

Share
கதை

குறிஞ்சி · காவட்டனார்

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லெடுப்பத் தலைமகள் சொல்லியது. · காவட்டனார் பாடியது