வடநாட்டார் தூங்கார் · கோவூர்கிழார்
திணை: வாகை · துறை: அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம். சிறப்பு : வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய அச்சத்தால் துஞ்சாக் கண்ணர் ஆயினமை · பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடைஉருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்பாசறை யல்லது நீயல் லாயே;நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;‘போர்’ எனில் புகலும் புனைகழல் மறவர்,‘காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;செல்வேம் அல்லேம்’ என்னார்; ‘கல்லென்விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,குண கடல் பின்ன தாகக், குட கடல்வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப,வலமுறை வருதலும் உண்டு’ என்று அலமந்துநெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.
திணை: வாகை · துறை: அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம். சிறப்பு : வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய அச்சத்தால் துஞ்சாக் கண்ணர் ஆயினமை · பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி