poem 28 · Purananuru · Many poets

புறநானூறு 28 · போற்றாமையும் ஆற்றாமையும் · உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

அறம் பொருள் இன்பம்‘சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,கூனும், குறளும், ஊமும், செவிடும்மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்குஎண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்பேதைமை அல்லது ஊதியம் இல்,’ எனமுன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது:-வட்ட வரிய செம்பொறிச் சேவல்ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்கானத் தோர், நின் தெவ்வர்; நீயே’புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து, அகத்தோர்புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்பூம்போது சிதைய வீழ்ந்தெனக், கூத்தர்ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே;அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்ஆற்றும், பெரும! நின்செல்வம்;ஆற்றாமை நின் போற்றா மையே.
Share
கதை

போற்றாமையும் ஆற்றாமையும் · உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

திணை: பொதுவியல் · துறை: முதுமொழிக் காஞ்சி. சிறப்பு: எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம். எனும் உறுதிப் பொருள்கள் பற்றிய குறிப்பு · பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி