poem 25 · Purananuru · Many poets

புறநானூறு 25 · கூந்தலும் வேலும் · கல்லாடனார்

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகலஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு,நிலவுத்திகழ் மதியமொடு, நிலஞ்சேர்ந் தாஅங்கு,உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரைஅணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,பிணியுறு முரசம் கொண்ட காலை,நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச்சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல்; செழிய!முலைபொலி அகம் உருப்ப நூறி,மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,அவிர் அறல் கடுக்கும் அம் மென்குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே.
Share
கதை

கூந்தலும் வேலும் · கல்லாடனார்

திணை: வாகை · துறை: அரசவாகை · பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்