poem 20 · Purananuru · Many poets

புறநானூறு 20 · மண்ணும் உண்பர் · குறுங்கோழியூர்கிழார்

இரு முந்நீர்க் குட்டமும்,வியன் ஞாலத்து அகலமும்,வளி வழங்கு திசையும்,வறிது நிலைஇய காயமும், என்றாங்குஅவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை;அறிவும், ஈரமும், பெருங்க ணோட்டமும்;சோறு படுக்கும் தீயோடுசெஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லதுபிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே;திருவில் அல்லது கொலைவில் அறியார்;நாஞ்சில் அல்லது படையும் அறியார்;திறனறி வயவரொடு தெவ்வர் தேய, அப்பிறர்மண் உண்ணும் செம்மல்; நின் நாட்டுவயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,பகைவர் உண்ணா அருமண் ணினையே;அம்பு துஞ்சும்கடி அரணால்,அறம் துஞ்சும் செங்கோலையே;புதுப்புள் வரினும், பழம்புள் போகினும்,விதுப்புற அறியா ஏமக் காப்பினை;அனையை ஆகல் மாறே,மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.
Share
கதை

மண்ணும் உண்பர் · குறுங்கோழியூர்கிழார்

திணை: வாகை · துறை: அரச வாகை · பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை