poem 23 · Purananuru · Many poets

புறநானூறு 23 · நண்ணார் நாணுவர் · கல்லாடனார்

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்,களிறுபடிந்து உண்டெனக், கலங்கிய துறையும்!கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,சூர்நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்கொள்பதம் ஒழிய வீசிய புலனும்;வடிநவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர்வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக்,கனைஎரி உரறிய மருங்கும்; நோக்கி,நண்ணார் நாண, நாள்தொறும் தலைச்சென்று,இன்னும் இன்னபல செய்குவன், யாவரும்துன்னல் போகிய துணிவினோன், என,ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படைஆலங் கானத்து அமர்கடந்து அட்டகால முன்ப! நின் கண்டனென் வருவல்;அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்,சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணைபூளை நீடிய வெருவரு பறந்தலைவேளை வெண்பூக் கறிக்கும்ஆளில் அத்தம் ஆகிய காடே.
Share
கதை

நண்ணார் நாணுவர் · கல்லாடனார்

திணை: வாகை · துறை: அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம் · பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன்