புதுப்பூம் பள்ளி · கோவூர்கிழார்
திணை: வாகை · துறை: அரசவாகை. சிறப்பு: பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில் வெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையைப் பதிக்கும் மரபுபற்றிய செய்தி · பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி
கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன்மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய,ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்,ஏழெயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு நின்;பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;பாடுநர் வஞ்சி பாடப், படையோர்தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்,புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்தமலரா மாலைப் பந்துகண் டன்னஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும்செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை;வல்லோன் தைஇய வரிவனப்பு உற்றஅல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்காம இருவர் அல்லது, யாமத்துத்தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளிவாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்பநீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.
திணை: வாகை · துறை: அரசவாகை. சிறப்பு: பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில் வெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையைப் பதிக்கும் மரபுபற்றிய செய்தி · பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி