poem 36 · Purananuru · Many poets

புறநானூறு 36 · நீயே அறிந்து செய்க · ஆலத்தூர் கிழார்

அடுநை யாயினும், விடுநை யாயினும்,நீ அளந் தறிதி நின் புரைமை; வார்தோல்,செயறியரிச் சிலம்பின், குறுந்தொடி மகளிர்பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்,கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்நெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து,வீகமழ் நெடுஞ்சினை புலம்பக், காவுதொறும்கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,ஆங்குஇனி திருந்த வேந்தனொடு, ஈங்குநின்சிலைத்தார் முரசும் கறங்க,மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.
Share
கதை

நீயே அறிந்து செய்க · ஆலத்தூர் கிழார்

திணை: வஞ்சி · துறை: துணை வஞ்சி · பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் · குறிப்பு: சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது