verse 19 · Sri Kandha Guru Kavacham · Sri Santhananda Swamigal

கந்தகுரு கவசம் 19 · மத்தியமாவதி

தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டிஎங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவன்ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி யிருந்துதண்டாயுதம் தாங்கி தருகின்றான் காட்சியுமேகந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினேகந்தகிரி வந்துநிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரேகலிதோஷ மகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதைபாராயணம் செய்து பாரில் புகழ்பெறுமின்ஸ்கந்தகுரு கவசபலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும்ஒருதரம் கவசமோதின் உள்ளழுக்குப் போகும்இருதரம் ஏத்துவீரேல் எண்ணியதெலாம் கிட்டும்மூன்றுதர மோதின் முன்னிற்பன் ஸ்கந்தகுருநான்முறை யோதி தினம் நல்லவரம் பெறுவீர்ஐந்துமுறை தினமோதி பஞ்சாக்ஷரம் பெற்றுஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்ஏழு முறை தினமேத்தின் எல்லாம் வசமாகும்எட்டுமுறை ஏத்தில் அட்டமா ஸித்திகிட்டும்ஒன்பது தரமோதின் மரணபயமொழியும்பத்துதர மோதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரேகன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்கந்தகுரு கவசமோதி கந்தகிரி ஏறிவிட்டால்முந்தை வினையெல்லாம் கந்தன் அகற்றிடுவான்நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்கன்னிமார் ஓடைநீரை கைகளில் நீஎடுத்துக்கந்தனென்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றிஉச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டால்உன்சித்த மலம் ஒடுக்கும் சித்தசுத்தியும் கொடுக்கும்கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலேகண்டு வழிபட்டு கந்தகிரி யேறிடுவீர்கந்தகிரி யேறிஞான ஸ்கந்தகுரு கவசமிதைபாராயணம் செய்துலகில் பாக்யமெலாம் பெற்றிடுவீர்!
Share

பொருள்

தன்னில் உனைக் காட்டி, உன்னில் தன்னைக் காட்டி, எங்கும் தன்னையும் உன்னையும் காட்டுவான்; கந்தகிரியில் இருந்து தண்டாயுதம் தாங்கி காட்சி தருகிறான். கந்தன் புகழைப் பாடக் கந்தகிரிக்கு வாருங்கள்; வந்து கண்டு உய்யுங்கள். கலிதோஷம் அகற்றும் இக்கவசத்தைப் பாராயணம் செய்து புகழ் பெறுங்கள். ஒரு முறை ஓதினால் உள்ளழுக்குப் போகும்; இரண்டு முறை ஓதினால் எண்ணியதெல்லாம் கிட்டும்; மூன்று முறை ஓதினால் ஸ்கந்தகுரு முன் நிற்பான்; நான்கு முறை ஓதினால் நல்ல வரம் கிட்டும்; ஐந்து முறை ஓதினால் பஞ்சாக்ஷரம்; ஆறு முறை ஓதினால் ஆறுதலை; ஏழு முறை ஓதினால் எல்லாம் வசமாகும்; எட்டு முறை ஓதினால் அட்டமா சித்தி; ஒன்பது முறை ஓதினால் மரணபயம் அகலும்; பத்து முறை ஓதினால் பற்றறுத்து வாழலாம். கன்னிமார் ஓடையில் நீராடி, நீறு பூசி, கவசம் ஓதி, ஸ்கந்தகிரி ஏறினால், முந்தைய வினையைக் கந்தன் அகற்றுவான்; நிந்தைகள் நீங்கும், நிஷ்டை கைகூடும். கன்னிமார் தேவிகளை வழிபட்டு ஸ்கந்தகிரி ஏறி, இக்கவசத்தை ஓதினால் உலகில் பாக்கியம் எல்லாம் பெறுவீர்.

Meaning

He will show you yourself within him and him within you, show himself and you everywhere; from Skandagiri he holds the staff and gives his vision. Come to Skandagiri singing Kandan's praise; come, see and be saved. Recite this kavacham that clears the evil of the age and win renown. One recitation washes the inner impurity; two and all you wish arrives; three and the Skanda Guru stands before you; four and a good boon is yours; five and the five letters; six and the six supports; seven and everything comes under your hand; eight and the eight siddhis; nine and the fear of death goes; ten and you live free of attachment. Bathe in the Kannimar stream, wear the sacred ash, recite the kavacham and climb Skandagiri, and Kandan will clear your former karma; reproach will end and steadiness be won. Worship the Kannimar goddesses, climb the hill and recite this kavacham, and you will win every blessing in the world.

சொற்பொருள் Word by word

தண்டாயுதம்
the staff-weapon
பஞ்சாக்ஷரம்
the five-syllable mantra
அட்டமா சித்தி
the eight siddhis
கன்னிமார் ஓடை
the Kannimar stream at Skandagiri

விளக்கம்

பலன் சொல்லும் இறுதிப் பாடல்: ஒன்று முதல் பத்து முறை வரை ஓதும் பயன்களையும், ஸ்கந்தகிரி ஏறும் முறையையும் சொல்கிறது.

Explanation

The closing song of fruits: what one recitation up to ten brings, and how to climb Skandagiri.

கதை

ராகம்: மத்தியமாவதி

ராகம்: மத்தியமாவதி

A story

Raga: மத்தியமாவதி