poem 14 · Purananuru · Many poets

புறநானூறு 14 · மென்மையும்! வன்மையும் · கபிலர்

கடுங்கண்ண கொல் களிற்றால்காப் புடைய எழு முருக்கிப்,பொன் இயல் புனை தோட்டியான்முன்பு துரந்து, சமந் தாங்கவும்;பார்உடைத்த குண்டு அகழிநீர் அழுவம் நிவப்புக் குறித்து,நிமிர் பரிய மா தாங்கவும்;ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்;பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்!வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை,புலவு நாற்றத்த பைந்தடிபூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன்துவைகறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லதுபிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும்மெல்லிய பெரும! தாமே, நல்லவர்க்குஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்குஇருநிலத்து அன்ன நோன்மைசெருமிகு சேஎய் ! நின் பாடுநர் கையே.
Share
கதை

மென்மையும்! வன்மையும் · கபிலர்

திணை: பாடாண் · துறை: இயன்மொழி · பாடப்பட்டோன்: சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்