அவர் ஊர் சென்று அழித்தவன் · இடைக்குன்றூர் கிழார்
திணை: வாகை · துறை: அரசவாகை
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்,அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து,அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்னமலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து,விழுமியம், பெரியம், யாமே; நம்மிற்பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என,எள்ளி வந்த வம்ப மள்ளர்புல்லென் கண்ணர்; புறத்திற் பெயர,ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்மாண்இழை மகளிர் நாணினர் கழியத்,தந்தை தம்மூர் ஆங்கண்,தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.
திணை: வாகை · துறை: அரசவாகை