பதிகம் 695 · தேவாரம் · திருஞானசம்பந்தர் · திருநாவுக்கரசர் · சுந்தரர்

திருமறுமாற்றத் – திருத்தாண்டகம்௿ · 6.98

1. நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்௿ நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம்௿ ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்௿ இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை௿ தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான௿ சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்௿ கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்௿ கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.2. அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்௿ அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்௿ புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி௿ உடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே௿ இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்௿ இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோந்௿ துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ்௿ சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே.3. வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்௿ மாதேவா மாதேவா என்று வாழ்த்தி௿ நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்௿ நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோங்௿ காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்௿ கன்மனமே நன்மனமாக் கரையப் பெற்றோம்௿ பாராண்டு பகடேறித் திரிவார் சொல்லும்௿ பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.4. உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்௿ உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே௿ செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்௿ நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்௿ நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்௿ நமச்சிவா யஞ்சொல்ல வல்லோம் நாவாற்௿ சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட௿ சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.5. என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்௿ இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை௿ சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ்௿ சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்௿ ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே௿ உறுபிணியார் செறலொழிந்திட் டோ டிப் போனார்௿ பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்௿ புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.6. மூவுருவின் முதலுருவாய் இருநான் கான௿ மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்௿ தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்௿ செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்௿ நாவுடையார் நமையாள வுடையா ரன்றே௿ நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான௿ காவலரே யேவி விடுத்தா ரேனுங்௿ கடவமலோங் கடுமையொடு களவற் றோமே.7. நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்௿ நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி௿ அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி௿ அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்௿ தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்௿ ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்௿ பொற்புடைய பேசக் கடவோம் பேயர்௿ பேசுவன பேசுதுமோ பிழையற் றோமே.8. ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் றன்னை௿ இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க௿ தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்௿ சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற௿ நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்௿ நின்றுண்பா ரெம்மை நினையச் சொன்ன௿ வாசக மெல்லாம் மறந்தோ மன்றே௿ வந்தீரார் மன்னவனா வான்றா னாரே.9. சடையுடையான் சங்கக் குழையோர் காதன்௿ சாம்பலும் பாம்பு மணிந்த மேனி௿ விடையுடையான் வேங்கை யதள்மே லாடை௿ வெள்ளிபோற் புள்ளியுழை மான்றோல் சார்ந்த௿ உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்௿ உம்மோடு மற்று முளராய் நின்ற௿ படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்௿ பாசமற வீசும் படியோம் நாமே.10. நாவார நம்பனையே பாடப் பெற்றோம்௿ நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்௿ ஆவாவென் றெமையாள்வான் அமரர் நாதன்௿ அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட௿ தேவாதி தேவன் சிவனென் சிந்தை௿ சேர்ந்திருந்தான் தென்றிசைக்கோன் றானே வந்து௿ கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலுங்௿ குணமாகக் கொள்ளோமெண் குணத்து ளோமே.
பகிர்