பழநி
பழநி · ராகம் ஹிந்தோளம் · தாளம் அங்கதாளம் (5)
தனதன தனன தான தனதன தனன தானதனதன தனன தான ...... தனதானஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்ஒருகுண வழியு றாத ...... பொறியாளர்உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடிஉறநம னரகில் வீழ்வ ...... ரதுபோய்பின்வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடிமறைவரி னனைய கோல ...... மதுவாகமருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறுவடிவுற அருளி பாத ...... மருள்வாயேதிரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்திருவிழி யருள்மெய்ஞ் ஞான ...... குருநாதன்திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோததிருநட மருள நாத ...... னருள்பாலாசுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடிதுகளேழ விடுமெய்ஞ் ஞான ...... அயிலோனேசுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதிதொழமுது பழநி மேவு ...... பெருமாளே.
பழநி · ராகம் ஹிந்தோளம் · தாளம் அங்கதாளம் (5)
பழநி · ராகம் ஹிந்தோளம் · தாளம் அங்கதாளம் (5)