பாடல் 41 · திருவாரூர் நான்மணி மாலை · குமரகுருபரர்

திருவாரூர் நான்மணி மாலை 41 · நேரிசை யாசிரியப்பா

வண்டுகூட் டுண்ண நுண்டுளி பிலிற்றித்தண்டே னுறைக்குந் தடமலர்ப் பொதும்பரின்விழுக்குலை தெறிப்ப விட்புலத் தவர்க்குப்பழுக்காய் தூக்கும் பச்சிளங் கமுகிற்செடிபடு முல்லைக் கொடிபடர்ந் தேறித்தலைவிரித் தன்ன கிளைதொறும் பணைத்துமறிந்துகீழ் விழுந்தந் நறுந்துணர்க் கொடிகள்நாற்றிசைப் புறத்து நான்றன மடிந்துதாற்றிளங் கதலித் தண்டினிற் படரவப்பைங்குலைக் கமுகிற் படர்சிறை விரித்தொருகண்செய் கூந்தற் களிமயி னடிப்பநெடுந்தாண் மந்திகள் குடங்கையிற் றூக்கிமுட்புறக் கனிக டாக்கக் கொட்புறும்வானர மொன்று வருக்கைத் தீங்கனிதானெடுத் தேந்துபு தலைமேற் கொண்டுமந்திக டொடர மருண்டுமற் றந்தப்பைந்துணர்க் கொடியிற் படர்தரு தொற்றம்வடஞ்சூழ்ந்து கிடந்த நெடும்பெருங் கம்பத்தணங்கனா ளொருத்தி யாடின ணிற்பப்பெரும்பணை தாங்கி மருங்கினர் கொட்டக்குடந்தலைக் கொண்டொரு கூன்கழைக் கூத்தன்வடந்தனி னடக்கும் வண்ணம தேய்க்கும்பூம்பணை மருதத் தீம்புனற் கமலைத்திருநகர் புரக்குங் கருணையங் கடவுள்அன்பெனு மந்தரத் தாசை நாண் பிணித்துவண்டுழாய் முகுந்தன் மதித்தனன் வருந்தஅருட்பெருங் கடலிற் றொன்றி விருப்பொடும்இந்திரன் வேண்ட வும்பர்நாட் டெய்திஅந்தமி றிருவொடு மரசவற் குதவிஒருகோ லோச்சி யிருநிலம் புரப்பான்திசைதிசை யுருட்டுந் திகிரியன் சென்றமுசுகுந் தனுக்கு முன்னின் றாங்குப்பொன்னுல கிழிந்து புடவியிற் றோன்றிமன்னுயிர்க் கின்னருள் வழங்குதும் யாமெனமேவர வழங்குமான் மன்றயாவரு நமர்கா ளிறைஞ்சுமின் னீரே.
பகிர்