அறிமுகம்
பதினோராம் திருமுறை நம்பியாண்டார் நம்பியின் தொகுப்பு. இதில் பன்னிரு புலவர்களின் பாசுரங்கள் அடங்குகின்றன — திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி. மொத்தம் 1419 பாசுரங்கள்.
இந்தத் தொகுப்பின் சிறப்பு அதன் வகைமை: பதிகங்களும் அந்தாதிகளும் மட்டுமல்ல, இரட்டைமணிமாலை, மும்மணிக்கோவை, திருவெண்பா, கலம்பகம், உலா, கூற்றிருக்கை, பாணி, கார் எட்டு, ஒருபா ஒருபஃது எனப் பல பிரபந்த வடிவங்கள் இங்கே வருகின்றன. காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியும், சேரமான் பெருமாளின் பொன்வண்ணத்தந்தாதியும், நக்கீரரின் திருமுருகாற்றுப்படையும் இதில் அடங்குவது இதன் மற்றொரு சிறப்பு.
Introduction
The eleventh Thirumurai is the collection of Nambiyandar Nambi. It holds the pasurams of twelve poets — Thirualavayudaiyar, Karaikkal Ammaiyar, Aiyadigal Kadavarkon, Cheraman Perumal, Nakkirar, Kalladar, Kapilar, Paranar, Ilampetumal Adigal, Athiravadigal, Pattinaththu Pillaiyar and Nambiyandar Nambi — 1419 verses in all.
Its distinction is variety of form: not only pathikams and anthathis but irattaimanimalai, mummanikkovai, thiruvenba, kalampakam, ula, kootrirukkai, pani, kar ettu and orupai orupathu all appear here. Karaikkal Ammaiyar’s Arputha Thiruvanthathi, Cheraman Perumal’s Ponvannanthanthathi and Nakkirar’s Thirumurugatrupadai are among them.