ராகம்: சகானா
ராகம்: சகானா
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதைஅகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனேஆறுமுக ஸ்வாமியுன்னை அருட்ஜோதியாய்க் காணஅகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய்அமரத் தன்மையினை அனுக்ரஹித்திடுவாயேவேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவேதேவரைக் காத்த திருச் செந்திலாண்டவனேதிருமுருகன் பூண்டியிலே திவ்யஜோதியான கந்தாபரஞ் ஜோதியுங்காட்டி பரிபூர்ண மாக்கிடுவாய்திருமலை முருகா நீ திட ஞான மருள்புரிவாய்செல்வமுத்துக் குமரா மும்மலமகற்றிடுவாய்அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனேஅருணாசலக் குமரா அருணகிரிக் கருளியவாதிருப்பரங்கிரி குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தைபகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்எல்லாப் பயங்களும் எனக்குக் கிடைத்திடவேஎங்கும் நிறைந்த கந்தா என்கண் முருகா நீஎன்னுள் ளறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்திருப்பேரூர் மாமுருகா திருவடியே சரணமய்யாஅறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
சிவகுரு நாதா, ப்ரணவத்தைச் செப்பி, அகக்கண் திறக்க உபதேசம் அருள்வாய். எல்லாத் திசையையும் வென்று திருச்செந்தில் அமர்ந்தவனே, ஆறுமுக ஸ்வாமியே, உன்னை அருட்ஜோதியாய்க் காண விரும்புகிறேன். திருமுருகன்பூண்டி, திருமலை, அண்ணாமலை, அருணாசலம், திருப்பரங்குன்றம், திருத்தணி, எட்டுக்குடி, திருப்பேரூர் ஆகிய தலங்களில் விளங்கும் கந்தா, வேல் கொண்டு பகைவரின் சூதுவாதையும் பில்லி சூனியத்தையும் விரட்டி, அகக்கண்ணைத் திறந்து அருள்வாய்.
Lord, Shiva's guru: speak the pranava to me; grant the teaching that opens the inner eye. You who conquered every quarter and sit at Thiruchendur, six-faced lord, I long to see you as the light of grace. Kandan who shines at Thirumuruganpoondi, Thirumalai, Annamalai, Arunachala, Thirupparankundram, Thiruthani, Ettukudi and Thirupperur: drive off the deceit of enemies, sorcery and the evil eye with your vel, and open my inner eye.
ப்ரணவ உபதேசத்தைக் கேட்பதில் தொடங்கும் இப்பாடல், முருகனின் தலங்களை வரிசையாக நினைத்து, கடைசியில் அகக்கண் திறப்பை வேண்டுகிறது.
It begins with the prayer for the pranava teaching, passes through the shrines of Murugan, and ends by asking for the opening of the inner eye.
ராகம்: சகானா
Raga: சகானா