ராகம்: ஆனந்தபைரவி
ராகம்: ஆனந்தபைரவி
படர்ந்த அன்பினைநீ பரப்பிரம்மம் என்றனையேஉலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்றாய்அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோயாவர்க்கும் இனியன்நீ யாவர்க்கும் எளியன்நீயாவர்க்கும் வலியன்நீ யாவர்க்கு மானோய்நீஉனக்கொரு கோயிலைஎன் அகத்துள்ளே புனைவேனேசிவசக்திக் குமரா சரணம் சரணமையாஅபாயம் தவிர்த்து தடுத்தாட் கொண்டருள்வாய்நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும்பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்யானென தற்ற மெய்ஞ் ஞானம தருள்வாய்நீமுக்திக்கு வித்தான முருகா கந்தா
படர்ந்த அன்பையே பரப்பிரம்மம் என்றாய்; உலகெங்கும் உள்ள ஒருபொருள் அன்பே; உள்ளுயிராக இருப்பதும் அன்பே; அன்பே குமரன், அன்பே ஸ்கந்தன், அன்பே 'ஓம்' என்னும் மந்திரம் என்றாய். அந்த அன்பை நெஞ்சில் அசையாமல் நிறுத்தும் சக்தியைத் தந்து ஆட்கொள்ள வா. யாவர்க்கும் இனியனும் எளியனும் வலியனும் நீயே. உனக்கு என் அகத்திலேயே கோயில் புனைவேன்; அபாயம் தவிர்த்து அபயம் தந்து, யான் எனது என்று அற்ற மெய்ஞ்ஞானம் அருள்வாய்.
You called wide love the supreme brahman: the one thing in all the world is love, the life within us is love, love is Kumaran, love is Skandan, love is the mantra Om. Give me the power to hold that love unmoving in my heart and take me. You are sweet to all, easy for all, strong for all. I will build you a temple inside me; remove my danger, give me fearlessness, and grant the true knowledge in which 'I' and 'mine' have ended.
இந்நூலின் தத்துவப் பாடல் இதுவே: அன்பே பிரம்மம், அன்பே முருகன், அன்பே ஓம்.
This is the hymn's philosophical song: love is brahman, love is Murugan, love is Om.
ராகம்: ஆனந்தபைரவி
Raga: ஆனந்தபைரவி