verse 6 · Sri Kandha Guru Kavacham · Sri Santhananda Swamigal

கந்தகுரு கவசம் 6 · கேதார கௌளம்

சதுர்மறை போற்றும் ஷண்முக நாதாஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வாஏழையைக் காக்கநீ வேலேந்தி வந்திடுவாய்தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோஆதிமூலமே அருவாய் உருவாய் நீஅடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வாதேவாதி தேவா சிவகுரோ வா வா வாவேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பாகாண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்வேதச் சுடரோய் மெய்கண்ட தெய்வமேமித்தையாம் இவ்வுலகை மித்தையென் றறிந்திடச்செய்அபயம் அபயம் கந்தா அபயமென் றலறுகின்றேன்அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன்உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்வேண்டிய துன்னருளே அருள்வதுன் கடனேயாம்உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்அட்டமா சித்திகளை அடியனுக்கருளிடப்பாஅஜபை வழியிலே அசையாம லிருத்திவிடுசித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடுசிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடுஅருள்ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடுஅறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடுஅனுக்ரஹித்திடுவாய் ஆதிகுரு நாதா கேள்ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதாதத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்துநல்லதும் கெட்டதும் நானென்பதும் மறந்துபாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய்அருள்வெளி விட்டிவனை அகலா திருத்திடுவாய்அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோசித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருளசீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்சிவானந்தம் தந்தருளி சிவசித்தராக்கிடுவாய்சிவனைப் போலென்னைச் செய்திடுவதுன் கடனேசிவசத் குருநாதா சிவசத் குருநாதா
Share

பொருள்

நான்கு மறைகளும் போற்றும் ஷண்முக நாதா, ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா, ஏழையைக் காக்க வேலேந்தி வந்து தாயாகவும் தந்தையாகவும் வருவாய். சக்தியும் சிவனுமாய் விரைந்து வா; அருவாய் உருவாய் நீயே ஆதிமூலம். 'வா வா வா' என்று அழைக்கிறேன். அபயம் கந்தா என்று அலறுகிறேன்; அச்சம் அகற்றி அமைதி தா. வேண்டியது அருள்வது உன் கடன். அட்டமா சித்திகளைத் தந்து, அஜபை வழியில் அசையாமல் இருத்தி, ஞானசித்தி தந்து, சிவானந்தத் தேனில் திளைக்கச் செய். தத்துவம், நல்லது கெட்டது, பாவ புண்ணியம், பரலோகம் — எல்லாம் மறக்கச் செய்து, என்னைச் சிவனைப் போலாக்கு.

Meaning

Lord of the six faces whom the four Vedas praise, son of the Mother whom the Agamas honour: take up the vel and come to guard this poor man; come as mother and father. Come at once as Shakti and as Shiva; you are the first root, formless and formed. 'Come, come, come', I call. 'Fear, Kandan, fear!' I cry — take away my fear and give me peace. It is your duty to grant what is asked. Give the eight siddhis, fix me unmoving in the ajapa path, give the siddhi of knowledge and let me revel in the honey of Shiva's bliss. Make me forget the tattvas, good and bad, sin and merit, the world beyond — and make me like Shiva.

சொற்பொருள் Word by word

அஜபை
the ajapa state, repetition without effort
அட்டமா சித்தி
the eight yogic powers
சிவானந்தம்
the bliss of Shiva
சிவசத் குருநாதா
the true guru who is Shiva

விளக்கம்

யோக மார்க்கத்தின் சொற்கள் நிறைந்த பாடல்: அஜபை, அட்டமா சித்தி, சிவானந்தம் — கவசம் யோகமாக மாறும் இடம்.

Explanation

The most yogic song of the hymn: ajapa, the eight siddhis, Shiva's bliss — here the kavacham turns into yoga.

கதை

ராகம்: கேதார கௌளம்

ராகம்: கேதார கௌளம்

A story

Raga: கேதார கௌளம்