verse 8 · Sri Kandha Guru Kavacham · Sri Santhananda Swamigal

கந்தகுரு கவசம் 8 · பீம்ப்ளாஸ்

பத்துதிக்குத் தோறுமெனை பறந்துவந்து ரக்ஷ¢ப்பாய்என்சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷ¢ப்பாய்நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்கண்களிரண்டையும் கந்தவேல் காக்கட்டும்நாசிகளிரண்டையும் நல்லவேல் காக்கட்டும்செவிகளிரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்கன்னங்களிரண்டையும் காங்கேயன் காக்கட்டும்உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்நாக்கை நம் முருகன் நயமுடன் காக்கட்டும்பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும்கழுத்தைக் கந்தன் கைகளால் காக்கட்டும்தோள்களிரண்டையும் தூய வேல் காக்கட்டும்கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும்ஹ்ருதயத்தில் கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடுஇடுப்பை முழங்காலை இணையான கால்களையும்புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமேஉரோமத் வாரமெலாம் உமைபாலா ரக்ஷப்பாய்தோல்ரத்தம் மஜ்ஜையையும் மாம்ஸமென்புமே தஸையும்
Share

பொருள்

பத்துத் திசைகளிலிருந்தும் பறந்து வந்து என்னைக் காத்தருள். என் சிகை, சிரசு, நெற்றி, புருவம், புருவங்களுக்கு இடையே உள்ள இடம், கண்கள், நாசிகள், செவிகள், கன்னங்கள், உதடு, நாக்கு, பற்கள், கழுத்து, தோள்கள், கைகள், விரல்கள், மார்பு, வயிறு, மனம், இதயம், உதரம், நாபி, குஹ்யம், லிங்கம், குதம், இடுப்பு, முழங்கால், கால்கள், புறங்கால், விரல்கள், நகங்கள், ரோமம், தோல், ரத்தம், மஜ்ஜை, மாம்சம், எலும்பு — எல்லாவற்றையும் கந்தவேலும் உமைபாலனும் காக்கட்டும்.

Meaning

Fly to me from the ten directions and guard me. My hair, head, brow, eyebrows and the space between them, eyes, nostrils, ears, cheeks, lips, tongue, teeth, throat, shoulders, hands and fingers, chest, belly, mind, heart, stomach, navel, the secret parts, the seat, hips, knees, legs, calves, toes, nails, hair, skin, blood, marrow, flesh and bone — let the vel of Kandan and the son of Uma guard them all.

சொற்பொருள் Word by word

சிகை
the tuft of hair
புருஷோத்தமன்
the supreme person
உமைபாலன்
the son of Uma
ரோமம்
body hair

விளக்கம்

உறுப்பு உறுப்பாகக் காவல் கேட்கும் பகுதி — கவசம் என்பதன் நேரடிப் பொருள் இங்கே நிறைவேறுகிறது.

Explanation

Limb by limb, the protection is asked — here the word kavacham, armour, is fulfilled literally.

கதை

ராகம்: பீம்ப்ளாஸ்

ராகம்: பீம்ப்ளாஸ்

A story

Raga: பீம்ப்ளாஸ்