verse 9 · Sri Kandha Guru Kavacham · Sri Santhananda Swamigal

கந்தகுரு கவசம் 9 · மோஹனம்

அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்என் அஹங்காரமுமகற்றி அறிவொளியா யிருந்தும்முருகா வெனைக்காக்க வேல் கொண்டு வந்திடுவீர்பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவேஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்க்லௌம் ஸௌம் நமஹவென்று சேர்த்திடடா நாள்தோறும்ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடாஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்திஒருமனத் தோடுநீ உருவையும் ஏத்திடடாமுருகனின் மூலமிது முழுமனத் தோடேத்திட்டால்மும்மல மகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்முருகன் இருப்பிடமே முக்தித் தலமாகுமப்பாஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமேஇக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடுமூலமதை ஏத்துவோர்க்கு காலபய மில்லையடாகாலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடாசொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன்தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமேமூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடாஅக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும்மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீகோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பாகோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமேஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமேவேதாந்த ரகசியமும் வெளியாகுமுன்னுள்ளேவேத சூக்குமத்தை விரைவாகப் பற்றிடலாம்சுப்ரஹ்மண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்அருட்பெருஞ்ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமேஅந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
Share

பொருள்

அறுமுகவா காத்திடுவீர்; என் அகங்காரத்தை அகற்றி அறிவொளியாய் நிற்கச் செய்யும்; பாபத்தைப் பொசுக்கி முருகா காக்கும். 'ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ' என்ற மூலமந்திரத்தை நாள்தோறும் சேர்த்து, ஒருமனதோடு முருகனின் உருவையும் ஏத்து. அப்படி ஓதினால் மும்மலம் அகன்று முக்தி கையில் வரும்; முருகன் இருக்கும் இடமே முக்தித் தலம். மூலத்தை ஜபிப்போர்க்குக் காலபயம் இல்லை; அக்ஷர லக்ஷம் ஜபித்தால் எண்ணியதெல்லாம் கிட்டும், எமபயம் அகலும், மூவுலகும் போற்றும். வேதாந்த ரகசியம் உள்ளே வெளியாகும்; சுப்ரஹ்மண்ய குரு ஜோதியாய்த் தோன்றுவான்.

Meaning

Six-faced one, guard me; strip away my pride and let me stand as the light of knowledge; burn up my sin and keep me. Join the root mantra 'Om Saum Saravanabhava Sreem Hreem Kleem Klaim Saum Namaha' daily and hold Murugan's form in a single mind. Said so, the three impurities fall away and release is in your hand; the place where Murugan dwells is itself the place of release. Those who repeat the root have no fear of death; repeat a lakh of letters and all you wish arrives, the fear of Yama goes, the three worlds praise you. The secret of Vedanta opens within, and Subrahmanya Guru appears as light.

சொற்பொருள் Word by word

மூலமந்திரம்
the root mantra of Murugan
மும்மலம்
the three impurities, anava, karma and maya
காலபயம்
the fear of death
அக்ஷர லக்ஷம்
a lakh of syllables of japa

விளக்கம்

இக்கவசத்தின் மந்திரப் பகுதி; பாடலின் நடுவில் மூலமந்திரம் அப்படியே தரப்படுகிறது.

Explanation

The mantra heart of the hymn: the root mantra is given in full in the middle of the song.

கதை

ராகம்: மோஹனம்

ராகம்: மோஹனம்

A story

Raga: மோஹனம்