poem 127 · Akananuru · Many poets

அகநானூறு 127 · பாலை · மாமூலனார்

இலங்குவளை நெகிழச் சாஅய் அல்கலும்கலங்கஞர் உழந்து நாம்இவண் ஒழியவலம்படு முரசில் சேர லாதன்முந்நீர் ஓட்டிக் கடம்பறுத் திமயத்துமுன்னோர் மருள வணங்குவிற் பொறித்துநன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்பொன்செய் பாவை வயிரமொடு -ஆம்பல்ஒன்று வாய் நிறையக் குவைஇ அன்றவண்நிலந்தினத் துறந்த நிதியத்து அன்னஒருநாள் ஒருபகல் பெறினும் வழிநாள்தங்கலர் வாழி தோழி செங்கோல்கருங்கால் மராத்து வாஅல் மெல்இணர்சுரிந்துவணர் பித்தை பொலியச் சூடிக்கல்லா மழவர் வில்லிடந் தழீஇவருநர்ப் பார்க்கும் வெருவரு கவலைமொழிபெயர் தேஎத்த ராயினும்பழிதீர் காதலர் சென்ற நாட்டே.
Share
கதை

பாலை · மாமூலனார்

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. · மாமூலனார் பாடியது