மருதம் · பரணர்
தலைமகட்குப்பாங்காயினார் கேட்ப இல்லிடைப் பரத்தைசொல்லி நெருங்கியது. · பரணர் பாடியது
வானம் வேண்டா வறனில் வாழ்க்கைநோன்ஞாண் வினைஞர் கோளறிந்து ஈர்க்கும்மீன்முதிர் இலஞ்சிக் கலித்த தாமரைநீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகலிலைஇருங்கயம் துளங்கக் காலுறு தோறும்பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடுஎழுந்த கௌவையோ பெரிதே நட்பேகொழுங்கோல் வேழத்துப் புணைதுணை யாகப்புனலாடு கேண்மை அனைத்தே அவனேஒண்டொடி மகளிர் 2பண்டையாழ் பாடஈர்ந்தண் முழவின் எறிகுணில் விதிர்ப்பத்தண்நறுஞ் சாந்தம் கமழும் தோள்மணந்துஇன்னும் பிறள்வயி னானே மனையோள்எம்மொடு புலக்கும் என்ப 3வென்வேல்மாரி அம்பின் மழைத்தோல் பழையன்காவிரி வைப்பிற் போஒர் அன்னஎன்செறிவளை யுடைத்தலோ இலனே 4உரிதினின்யாந்தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்திருநுதல் பசப்ப நீங்கும்கொழுநனுஞ் சாலுந்தன் உடனுறை பகையே.
Vaanam vaentaa varanil vaazhkkai / Noannjaan vinainjar koalarinthu eerkkum / Meenmuthir ilanjik kaliththa thaamarai / Neermisai nivantha netunthaal akalilai / Irungkayam thulangkak kaaluru thoarum / Perungkalirrus seviyin alaikkum ooranotu / Ezhuntha kauvaiyoa perithae natpae / Kozhungkoal vaezhaththup punaithunai yaakap / Punalaatu kaenmai anaiththae avanae / Ontoti makalir 2pantaiyaazh paata / Eernthan muzhavin erikunil vithirppath / Thannarunj saantham kamazhum thoalmananthu / Innum piralvayi naanae manaiyoal / Emmotu pulakkum enpa 3venvael / Maari ampin mazhaiththoal pazhaiyan / Kaaviri vaippir poaor annaen / Serivalai yutaiththaloa ilanae 4urithinin / Yaanthan pakaiyaem allaem saernthoar / Thirunuthal pasappa neengkum / Kozhunanunj saalunthan utanurai pakaiyae.
தலைமகட்குப்பாங்காயினார் கேட்ப இல்லிடைப் பரத்தைசொல்லி நெருங்கியது. · பரணர் பாடியது