செவ்வானும் சுடுநெருப்பும் · பாண்டரங் கண்ணனார்
திணை: வஞ்சி · துறை: மழபுல வஞ்சி · பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
வினை மாட்சிய விரை புரவியடு,மழை யுருவின தோல் பரப்பி,முனை முருங்கத் தலைச்சென்று, அவர்விளை வயல் கவர்பு ஊட்டிமனை மரம் விறகு ஆகக்கடி துறைநீர்க் களிறு படீஇஎல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்,புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்,துணை வேண்டாச் செரு வென்றிப்,புலவு வாள் புலர் சாந்தின்முருகன் சீற்றத்து, உருகெழு குருசில்!மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,பனிப் பகன்றைக், சுனிப் பாகல்,கரும்பு அல்லது காடு அறியாப்பெருந் தண்பணை பாழ் ஆக,ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை,நாம நல்லமர் செய்ய,ஒராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.
திணை: வஞ்சி · துறை: மழபுல வஞ்சி · பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி