எங்ஙனம் பாடுவர்? · உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
திணை: பாடாண் · துறை: இயன்மொழி. சிறப்பு : தலைவனின் இயல்பு கூறுதல் · பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி
செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,வளி திரிதரு திசையும்,வறிது நிலைஇய காயமும், என்றிவைசென்றளந்து அறிந்தார் போல, என்றும்இனைத்து என்போரும் உளரே அனைத்தும்அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்,களிறுகவுள் அடுத்த எறிகல் போலஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்படயாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடுமீப்பாய் களையாது, மிசைப் பரந் தோண்டாது,புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்இடைப்புலப் பெருவழிச் சொரியும்கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!
திணை: பாடாண் · துறை: இயன்மொழி. சிறப்பு : தலைவனின் இயல்பு கூறுதல் · பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி