பூவிலையும் மாடமதுரையும் · கோவூர்கிழார்
திணை: பாடாண் · துறை: இயன்மொழி. சிறப்பு: சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு · பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப்பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ?‘வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்,ஒண்ணுதல், விறலியர் பூவிலை பெறுக!’ என,மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!தொன்னிலக் கிழமை சுட்டின், நன்மதிவேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்தபசுமண் குரூஉத்திரள் போல, அவன்கொண்ட குடுமித்தும், இத் தண்பணை நாடே.
திணை: பாடாண் · துறை: இயன்மொழி. சிறப்பு: சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு · பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி