புகழினும் சிறந்த சிறப்பு · மாறோக்கத்து நப்பசலையார்
திணை: பாடாண் · துறை: இயன்மொழி, சிறப்பு : வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது · பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
புறவின் அல்லல் சொல்லிய, கறையடியானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல்ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்,அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று,மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால்முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு,எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்,கண்ணார் கண்ணிக், கலிமான், வளவ!யாங்கனம் மொழிகோ யானே; ஓங்கியவரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டுஇமையம் சூட்டியஏம விற்பொறி,மாண்வினை நெடுந்தேர், வானவன் தொலையவாடா வஞ்சி வாட்டும்நின்பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே?
திணை: பாடாண் · துறை: இயன்மொழி, சிறப்பு : வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது · பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்