திருச்செந்தூர்
திருச்செந்தூர் · ராகம் ஹூஸேனி · தாளம் அங்கதாளம் (9)
தனதனன தனன தந்தத் ...... தனதானஇயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகிஇரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதேஉயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கிஉனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயேமயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனேகயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வேகரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.
திருச்செந்தூர் · ராகம் ஹூஸேனி · தாளம் அங்கதாளம் (9)
Thiruchendur · ragam ஹூஸேனி · thalam அங்கதாளம் (9)