பழநி
பழநி
தனதனன தனதனன தனதனன தனதனனதனதனன தனதனன ...... தனதானமுருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவுமுறுவல்தர விரகமெழ ...... அநுராகம்முதிரவச மறவிதரி யெழுவகைவளை கலகலெனமுகநிலவு குறுவெயர்வு ...... துளிவீசஅருமதுர மொழிபதற இதழமுது பருகிமிகஅகமகிழ இருகயல்கள் ...... குழையேறஅமளிபடு மமளிமல ரணையின் மிசை துயிலுகினும்அலர்கமல மலரடியை ...... மறவேனேநிருதனொடு வருபுரியு மடுகரியும் ரதநிரையும்நெறுநெறன முறியவிடும் ...... வடிவேலாநிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமரநெடியநெடு ககனமுக ...... டுறைவோனேவருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதறமதுவினிரை பெருகுவளி ...... மலைமீதேவளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமுமருவிமகிழ் பழநிவரு ...... பெருமாளே.
பழநி
Palani