பழநி
பழநி
தந்தன தந்தன தான தந்தனதந்தன தந்தன தான தந்தனதந்தன தந்தன தான தந்தன ...... தனதானவஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்வந்தவர் தங்களை வாதை கண்டவர்வங்கண முந்தெரி யாம லன்புகள் ...... பலபேசிமஞ்சமி ருந்தநு ராக விந்தைகள்தந்தக டம்பிக ளூற லுண்டிடுமண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு ...... முரையாலேசஞ்சல முந்தரு மோக லண்டிகள்இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள்சங்கம மென்பதை யேபு ரிந்தவ ...... னயராதேதங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர்கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள்தந்தசு கந்தனை யேயு கந்துடல் ...... மெலிவேனோகஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்படவென்றுகு ருந்தினி லேறி மங்கையர்கண்கள்சி வந்திட வேக லந்தரு ...... முறையாலேகண்டும கிழ்ந்தழ காயி ருந்திசைகொண்டுவி ளங்கிய நாளி லன்பொடுகண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் ...... மருகோனேகுஞ்சர வஞ்சியு மான்ம டந்தையுமின்பமி குந்திட வேய ணைந்தருள்குன்றென வந்தருள் நீப முந்திய ...... மணிமார்பாகொந்தவி ழுந்தட மேநி ரம்பியபண்புத ருந்திரு வாவி னன்குடிகுன்றுக ளெங்கினு மேவ ளர்ந்தருள் ...... பெருமாளே.
பழநி
Palani