குறிஞ்சிப்பாட்டு
அடிகள் 231–240 · கபிலர்
நேரிறை முன்கை பற்றி நுமர்தரநாடறி நன்மண மயர்கஞ் சின்னாட்கலங்க லோம்புமி னிலங்கிழை யீரெனவீர நன்மொழி தீரக் கூறித்துணைபுண ரேற்றி னெம்மொடு வந்துதுஞ்சா முழவின் மூதூர் வாயிலுண்டுறை நிறுத்தப் பெயர்ந்தன னதற்கொண்டன்றை யன்ன விருப்போ டென்றுமிரவரன் மாலைய னேவரு தோறுங்காவலர் கடுகினுங் கதநாய் குரைப்பினு
"நும்முடைய சுற்றத்தார் நுமது நேரிய இறையினையுடைய முன்கையைப் பிடித்து எமக்குத் தர, நாட்டிலுள்ளார் எல்லாம் அறியும் நல்ல மணத்தைப் பின்பு நிகழ்த்துவோம்; சில நாள் இங்ஙனம் ஒழுகாநின்றேம் என்று கலக்கம் தீரும்படி பாதுகாப்பீராக" என்று அருளுடைத்தாகிய நல்ல வார்த்தையை இவள் நெஞ்சில் வருத்தம் தீரும்படிச் சொல்லி, ஆவைப் புணர்ந்த ஏறு போல விடாமல் எம்முடனே கூட வந்து, ஓசை ஒருகாலும் அறாத முழவினையுடைய பழைய நம்மூர் வாசலில், பலரும் நீர் உண்ணும் துறையிலே எம்மை நிறுத்தி மீண்டு போனான்; அதனால் அப்புணர்ச்சி தொடங்கி அம்முதல் நாள் போன்ற விருப்பத்தோடே எந்நாளும் இரவுக்குறியிலே வருதலைத் தனக்கு இயல்பாகவுடையவன்; அதனால் அவன் வரும்போதெல்லாம் ஊர்க்காவலர் கடுகிக் காத்தாராயினும், கோபமுடைய நாய் குரைத்தாயினும், நீ துயில் உணர்ந்தாயாயினும், நிலா வெளிப்பட்டதாயினும், மூங்கிலையொத்த மெல்லிய தோளில் இனிய துயிலைப் பெறாது போவான் —
"Your kin will take your straight-browed hand and give it to us, and then we will hold the wedding that the whole country knows of; only guard your name a few days more, and let your trouble cease" — with such gracious words he eased the grief in her heart. And like a bull that has come to its cows he would not be parted from us, but came with us to the gate of our old town where the drum never ceases, and left us at the bathing ghat where many come to drink, and turned back. And from that union onward, with the same eagerness as on that first day, it is his nature to come by night. So every time he comes — though the town guards are up and watching, though the angry dog barks, though you wake from sleep, though the moon comes out bright — he never wins the sweet sleep that waits on those bamboo-slender shoulders —
இந்தப் பத்தில் மிக முக்கியமான ஒரு வாக்குறுதி: "நாடறி நன்மணம்" — நாடு அறியும் மணம். அதாவது இரகசியக் காதல் ஒரு நாள் பொது ஆகும்.
ஆனால் அதே நேரத்தில் அவன் ஒவ்வொரு இரவும் வருகிறான் — காவலர், நாய், நிலா, எல்லாம் எதிர்த்தும். வாக்குறுதி கொடுத்துவிட்டு அதே பழக்கத்தில் இருக்கிறான். இது மனிதனின் நேர்மையின்மை, ஆனால் காதலால்.
A crucial promise here: "the wedding the whole country knows." The secret love will one day be public.
But he still comes every night, against guards, dogs and moonlight. He has made the promise and kept the habit. That is a human inconsistency — but made of love.
அடிகள் 231–240 · கபிலர்
Lines 231–240 · Kapilar
வாக்குறுதி கொடுத்துவிட்டு அதே பழைய பழக்கத்தில் இருப்பது பொய்யா?
Is keeping the old habit after making the promise a kind of lie?