verse 46 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 46 · கரைவாய்ப் பருதி

இழையர் குழையர் நறுந்தண் மாலையர்சுடர்நிமிர் அவிர்தொடி செறித்த முன்கைத்திறல்விடு திருமணி இலங்கு மார்பின்வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்தொடைபடு பேர்யாழ் பாலை பண்ணிப்பணியா மரபின் உழிஞை பாடஇனிதுபுறந் தந்(து)அவர்க்(கு) இன்மகிழ் சுரத்தலின்சுரம்பல கடவும் கரைவாய்ப் பருதிஊர்பாட்(டு) எண்ணில் பைந்தலை துமியப்பல்செருக் கடந்த கொல்களிற்(று) யானைக்கோடுநரல் பெளவம் கலங்க வேல்இட்(டு)உடைதிரைப் பரப்பில் படுகடல் ஓட்டியவெல்புகழ்க் குட்டுவன் கண்டோ ர்செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே.
Share
கதை

கரைவாய்ப் பருதி

ஐந்தாம் பத்து · காசறு செய்யுட் பரணர் பாடியது · பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் · செந்துறைப் பாடாண்பாட்டு