verse 50 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 50 · *வெருவரு புனற்றார்*

மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக்கால்மயங்கு கதழ்உறை ஆலியொடு சிதறிக்கரும்(பு)அமல் கழனிய நாடுவளம் பொழியவளம்கெழு சிறப்பின் உலகம் புரைஇச்செங்குணக்(கு) ஒழுகும் கலுழி மலிர்நிறைக்காவிரி அன்றியும் பூவிரி புனலொருமூன்றுடன் கூடிய கூடல் அனையைகொல்களிற்(று), உரவுத்திரை பிறழ அவ்வில் பிசிரப்புரைதோல் வரைப்பின் எஃகுமன்ண அவிர்தரவிரவுப்பணை முழங்(கு)ஒலி வொணஇய வேந்தர்க்(கு)அரணம் ஆகிய வெருவரு புனல்தார்கல்மிசை யவ்வும் கடலவும் பிறவும்அருப்பம் அமைஇய அமர்கடந்(து) உருத்தஆள்மலி மருங்கின் நா(டு)அகப் படுத்துநல்இசை நனந்தலை இரிய ஒன்னார்உருப்(பு)அற நிரப்பினை ஆதலின் சாந்துபுலர்புவண்ணம் நீவி வகைவனப்(பு) உற்றவரிஞிமி(று) இமிரும் மார்புபிணி மகளிர்விரிமென் கூந்தல் மெல்அணை வதிந்துகொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப்பொழுதுகொள் மரபின் மென்பிணி அவிழஎவன்பல கழியுமோ பெரும பல்நாள்பகைவெம் மையின் பாசறை மாணஇப்பா(டு)அரி(து) இயைந்த சிறுதுயில் இயலாதுகோடு முழங்(கு) இமிழ்இசை எடுப்பும்பீடுகெழு செல்வம் மாணஇய கண்ணே.— பதிகம் —வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்கான்நவில் கானம் கணையின் போகிஆரிய அண்ணலை வீட்டிப் போ஢சைஇன்பல் அருவிக் கங்கை மண்ணிஇனம்தெரி பல்ஆன் கன்றொடு கொண்டுமாறா வல்வில் இடும்பின் புறத்(து)இறுத்(து)உறுபுலி அன்ன வயவர் வீழச்சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறிஅக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்துபழையன் காக்கும் கரும்சினை வேம்பின்முழாரை முழுமுதல் துமியப் பண்ணிவால்இழை கழித்த நறும்பல் பெண்டிர்பல்இருங் கூந்தல் முரற்சியால்குஞ்சர ஒழுகை பூட்டி வெந்திறல்ஆராச் செருவின் சோழர்குடிக்(கு) உரியோர்ஒன்பதின்மர் வீழ வாயில்புறத்(து) இறுத்துநிலைச்செருவின் ஆற்றலை அறுத்துக்கெடல் அரும் தானையொடுகடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமமைந்தகாசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு.அவைதாம்: சுடர்வீவேங்கை, தசும்புதுளங்கிருக்கை, ஏறாவேணி, நோய்தபுநோன்றொடை, ஊன்றுவையடிசில், கரை வாய்ப்பருதி, நன்னுதல் விறலியர், பேரெழில்வாழ்க்கை, செங்கை மறவர், வெருவருபுனற்றார்.இவை பாட்டின் பதிகம்.பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு வாரியையும் தன்மகன் குட்டுவன் சேரலையுங் கொடுத்தான் அக்கோ.கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்.
Share
கதை

*வெருவரு புனற்றார்*

ஐந்தாம் பத்து · காசறு செய்யுட் பரணர் பாடியது · பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் · வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு