verse 52 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 52 · சிறுசெங்குவளை

கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்துவடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பிஅருங்கலந் தாணஇயர் நீர்மிசை நிவக்கும்பெருங்கலி வங்கம் திசைதிரிந் தாங்குமைஅணிந்(து) எழுதரும் ஆயிரம் பஃறோல்மெய்புதை அரணம் எண்ணா(து) எஃகுசுமந்துமுன்சமத்(து) எழுதரும் வன்கண் ஆடவர்தொலையாத் தும்பை தெவ்வழி விளங்கஉயர்நிலை உலகம் எய்தினர் பலர்படநல்அமர்க் கடந்தநின் செல்உறழ் தடக்கைஇரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇயமலர்(பு)அறி யாஎனக் கேட்டிகும் இனியேசுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்துமுழாஇமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆகச்சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்துநீநளிந்தனை வருதல் உடன்றனள் ஆகிஉயவும் கோதை ஊரல்அம் தித்திஈர்இதழ் மழைக்கண் பேர்இயல் அரிவைஒள்இதழ் அவிழ்அகம் கடுக்கும் சீறடிப்பல்சில கிண்கிணி சிறுபர(டு) அலைப்பக்கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்றுநின்எறியர் ஓக்கிய சிறுசெங் குவளைஈஎன இரப்பவும் ஒல்லாள் நீஎமக்(கு)யாரை யோஎனப் பெயர்வோள் கைஅதைகதும்என உருத்த நோக்கமோ(டு) அதுநீபாஅல் வல்லாய் ஆயினை பாஅல்யாங்குவல் லுநையோ வாழ்கநின் கண்ணிஅகல்இரு விசும்பில் பகல்இடம் தாணஇயர்தெறுகதிர் திகழ்தரும் உழுகெழு ஞாயிற்(று)உருபுகிளர் வண்ணம் கொண்டவான்தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே.பஃறோல் = பல்தோல்
Share
கதை

சிறுசெங்குவளை

ஆறாம் பத்து · காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது · பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை · குரவைநிலை