செங்கை மறவர்
ஐந்தாம் பத்து · காசறு செய்யுட் பரணர் பாடியது · பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் · விறலியாற்றுப்படை
யாமும் சேறுக நீயிரும் வம்மின்துயிலுங் கோதைத் துளங்(கு)இயல் விறலியர்கொளைவல் வாழ்க்கைநும் கிளைஇனி(து) உணீஇயர்களிறுபரந்(து) இயலக் கடுமா தாங்கஒளிறுகொடி நுடங்கத் தேர்திந்து கொட்பஎஃகுதுரந்(து) எழுதரும் கைகவர் கடும்தார்வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்துமொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்வலம்படு குழூஉநிலை அதிர மண்டிநெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்நிறம்படு குருதி நிலம்படர்ந்(து) ஓடிமழைநாள் புனலின் அவல்பரந்(து) ஒழுகப்படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்துபடுகண் முரசம் நடுவண் சிலைப்பவளன்அற நிகழ்ந்து வாழுநர் பலர்படக்கருஞ்சினை விறல்வேம்(பு) அறுத்தபெருஞ்சினைக் குட்டுவன் கண்டனம் வரற்கே.
ஐந்தாம் பத்து · காசறு செய்யுட் பரணர் பாடியது · பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் · விறலியாற்றுப்படை