verse 45 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 45 · ஊன்துவை அடிசில்

பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்புற்(று)அடங்(கு) அரவின் ஒடுங்கிய அம்பின்நொசி(வு)உடை வில்லின் ஒசியா நெஞ்சின்களி(று)எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்விழுமியோர் துவன்றிய அகன்கண் ணாட்பின்எழுமுடி மார்பின் எய்திய சேரல்குண்டுகண் அகழிய மதில்பல கடந்துபண்டும் பண்டும்தாம் உள்அழித்(து) உண்டநாடுகெழு தாயத்து நனம்தலை அருப்பத்துக்கதவம் காக்கும் கணைஎழு அன்னநிலம்பெறு திணிதோள் உயர ஓச்சிப்பிணம்பிறங்(கு) அழுவத்துத் துணங்கை ஆடிச்சோறுவே(று) என்னா ஊன்துவை அடிசில்ஓடாப் பீடர் உள்வழி இறுத்துமுள்இடு(பு) அறியா ஏணித் தெவ்வர்சிலைவிசை அடக்கிய மூரி வெண்தோல்அனைய பண்பின் தானை மன்னர்இனியார் உளரோநின் முன்னும் இல்லைமழைகொளக் குறையாது புனல்புக நிறையாது20 விலங்குவளி கடவும் துளங்(கு)இரும் கமம்சூல்வயங்குமணி இமைப்பின் வேல்இடுபுமுழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே.
Share
கதை

ஊன்துவை அடிசில்

ஐந்தாம் பத்து · காசறு செய்யுட் பரணர் பாடியது · பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் · செந்துறைப் பாடாண்பாட்டு