நாடுகாண் அவிர்சுடர்
நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · விறலியாற்றுப்படை
போர்நிழல் புகன்ற சுற்றமொ(டு) ஊர்முகத்(து)இறாஅ லியரோ பெருமநின் தானைஇன்இசை இமிழ்முர(சு) இயம்பக் கடிப்பிகூஉப்புண்டோ ள் ஆடவர் போர்முகத்(து) இறுப்பக்காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல்வந்(து)இறை கொண்டன்று தானை அந்தில்களைநர் யார்இனிப் பிறர்எனப் பேணிமன்எயில் மறவர் ஒலிஅவிந்(து) அடங்கஒன்னார் தேயப் பூமலைந்(து) உரைஇவெண்தோடு நிரைஇய வேந்(து)உடை அரும்சமம்கொன்றுபுறம் பெற்று மன்பதை நிரப்பிவென்றி ஆடிய தொடித்தோள் மீகைஎழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்பொன்அம் கண்ணிப் பொலம்தேர் நன்னன்சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்ததார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்புன்கால் உன்னம் சாயத் தெள்கண்வறிதுகூட்(டு) அரியல் இரவலர்த் தடுப்பத்தான்தர உண்ட நனைநறவு மகிழ்ந்துநீர்இமிழ் சிலம்பின் நேரி யோனேசெல்லா யோதில் சில்வளை விறலிமலர்ந்த வேங்கையின் வயங்கிழை அணிந்துமெல்இயல் மகளிர் எழில்நலம் சிறப்பப்பாணர் பைம்பூ மலைய இளையர்இன்களி வழாஅ மென்சொல் அமர்ந்துநெஞ்சுமலி உவகையர் வியன்களம் வாழ்த்தத்தோட்டி நீவாது தொடிசேர்பு நின்றுபாகர் ஏவலின் ஒண்பொறி பிசிரக்காடுதலைக் கொண்ட நாடுகாண் அவிர்சுடர்அழல்விடுபு மாணஇய மைந்தின்தொழில்புகல் யானை நல்குவன் பலவே.— பதிகம் —ஆராத் திருவிற் சேர லாதற்குவேளாவிக் கோமான்பதுமன் தேவி ஈன்ற மகன்முனைபனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த்(து)ஊழின் ஆகிய உயர்பெரும் சிறப்பின்பூழி நாட்டைப் படைஎடுத்துத் தழீஇஉருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனைநிலைச்செருவி னால்தலை யறுத்(து)அவன்பொன்படு வாகை முழுமுதல் தடிந்துகுருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச்செருப்பல செய்து செங்களம் வேட்டுத்துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றிக்களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக்காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப்பாட்டு.அவைதாம்: கம்ழகுரற் றுழாய், கழையமல் கழனி, வரம்பில் வெள்ளம், ஒண்பொறிக் கழற்கால், மெய்யாடுபறந்தலை, வான்மயங்கு கடுந்தார், வலம்படு வென்றி, பரிசிலர்வெறுக்கை, ஏவல் வியன்பனை, நாடுகானவிர்சுடர். இவை பாட்டின் பதிகம்.பாடிப்பெற்ற பரிசில்: நாற்பதுநூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆளவ்திற் பாகங்கொடுத்தான் அக்கோ.களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · விறலியாற்றுப்படை