verse 35 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 35 · மெய்யாடு பறந்தலை

புரைசால் மைந்தநீ ஓம்பல் மாறேஉரைசான் றனவால் பெருமைநின் வென்றிஇரும்களிற்று யானை இலங்குவால் மருப்பொடுநெடும்தேர்த் திகிரிதாய வியன்களத்(து)அள(கு)உடைச் சேவல் கிளைபுகா வாரத்தலைதுமிந்(து) எஞ்சிய மெய்ஆடு பறந்தலைஅந்தி மாலை விசும்புகண் டன்னசெஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்துப்பேஎய் ஆடும் வெல்போர்வீயா யாணர் நின்வயி னானே.
Share
கதை

மெய்யாடு பறந்தலை

நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · வாகைத்துறைப் பாடாண்பாட்டு