புகன்றவாயம்
மூன்றாம் பத்து · பாலைக் கெளதமனார் பாடியது · பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் · பெருஞ்சோற்றுநிலை
இணர்ததை ஞாழல் கரைகெழு பெருந்துறைமணிக்கலத் தன்ன மாஇதழ் நெய்தல்பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னைவால்இணர்ப் படுசினக் குரு(கு)இறை கொள்ளும்அல்குறு கானல் ஓங்குமணல் அடைகரைதாழ்அடும்பு மலைந்த புணாவளை ஞரலஇலங்குநீர் முத்தமொடு வார்துகிர் எடுக்கும்தண்கடல் படப்பை மென்பா லனவும்காந்தள்அங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர்செங்கோட்(டு) ஆமான் ஊனொடு காட்டமதன்உடை வேழத்து வெண்கோடு கொண்டுபொன்உடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்காலம் அன்றியும் கரும்(பு)அறுத்(து) ஒழியா(து)அரிகால் அவித்துப் பலபூ விழவின்தேம்பாய் மருதம் முதல்படக் கொன்றுவெண்தலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச்சிறைகொள் பூசலின் புகன்ற ஆயம்முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயரும்செழும்பல் வைப்பி பழனப் பாலும்ஏனல் உழவர் வரகுமீ(து) இட்டகான்மிகு குளவிய வன்புசேர் இருக்கைமென்தினை நுவணை முறைமுறை பகுக்கும்புன்புலம் தழீஇய புறஅணி வைப்பும்பல்பூஞ் செம்மல் காடுபயம் மாறிஅரக்கத் தன்ன நுண்மணல் கோடுகொண்(டு)ஒண்நுதல் மகளிர் கழலொடு மறுகும்விண்உயர்ந்(து) ஓங்கிய கடற்றவும் பிறவும்பணைகெழு வேந்தரும் வேளிரும்ஒன்று மொழிந்துகடலவுங் காட்டவும் அரண்வலியார் நடுங்கமுரண்மிகு கடுங்குரல் விசும்(பு)அடை(பு) அதிரக்கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்(து)அருந்திறல் மரபின் கடவுள் பேணியர்உயர்ந்தோன் ஏந்திய அரும்பெறல் பிண்டம்கருங்கண் பேய்மகள் கைபுடையூஉ நடுங்கநெய்த்தோர் தூஉய நிறைமகிழ் இரும்பலிஎறும்பும் மூசா இறும்பூது மரபின்கருங்கண் காக்கையொடு பருந்(து)இருந் தாரஓடாப் பூட்கை ஒண்பொறிக் கழல்கால்பெரும்சமம் ததைந்த செருப்புகல் மறவர்உருமுநிலன் அதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்துபெருஞ்சோ(று) உகுத்தற் கெறியும்கடுஞ்சின வேந்தேநின் தழங்குகுரல் முரசே.— பதிகம் —இமைய வரம்பன் தம்பி அமைவரஉம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇஅகப்பா எறிந்து பகல்தீ வேட்டுமதிஉறழ் மரபின் முதியரைத் தழீஇக்கண்ணகன் வைப்பின் மண்வகுத்(து) ஈத்துக்கருங்களிற்(று) யானைப் புணர்நிரை நீட்டிஇருகடல் நீணரும் ஒருபகல் ஆடிஅயிரை பரைஇ ஆற்றல்சால் முன்போ(டு)ஒடுங்கா நல்இசை உயர்ந்த கேள்விநெடும்பார தாயனார் முந்(து)உறக் காடுபோந்தபல்யானைச் செல்கெழு குட்டுவனைப்பாலைக் கெளதமனார் பாடினார் பத்துப்பாட்டு.அவைதாம்: அடுநெய்யாவுதி, கயிறு குறுமுகவை, ததைந்தகாஞ்சி,சீர்சால்வெள்ளி, கானுணங்குகடுநெறி, காடுறுகடுநெறி,தொடந்தகுவளை, உருத்துவரு மலிர்நிறை, வெண்கைமகளிர், புகன்றாவாயம்.இவை பாட்டின் பதிகம்.பாடிப்பெற்ற பரிசில்: 'நீர் வெண்டியது கொண்மின்' என 'யானும் என் பார்ப்பனியும்சுவர்க்கம் புகல் வெண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பதுபெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும்காணாராயினார்.இமயவரம்பன்றம்பி பல்யானைச்செல்கெழு குட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
மூன்றாம் பத்து · பாலைக் கெளதமனார் பாடியது · பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் · பெருஞ்சோற்றுநிலை