வெண்கை மகளிர்
மூன்றாம் பத்து · பாலைக் கெளதமனார் பாடியது · பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் · வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு
அவல்எறிந்த உலக்கை வாழைச் சேர்த்திவளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்முடந்தை நெல்லின் விளைவயல் பரந்ததடந்தாள் நாரை இரிய அயிரைக்கொழுமீன் ஆர்கைய மரந்தொறும் குழாஅலின்வெண்கை மகளிர் வெண்குரு(கு) ஓப்பும்அழியா விழவின் இழியாத் திவவின்வயிரிய மாக்கள் பண்அமைத்(து) எழீஇமன்ற நண்ணி மறுகுசிறை பாடும்அகன்கண் வைப்பின் ஆடுமன் அளியவிரவுவேறு கூலமொடு குருதி வேட்டமயிர்புதை மாக்கண் கடிய கழறஅமர்கோள் நேர்இகந்(து) ஆர்எயில் கடக்கும்பெரும்பல் யானைக் குட்டுவன்வரம்பில் தானை பரவா ஊங்கே.
மூன்றாம் பத்து · பாலைக் கெளதமனார் பாடியது · பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் · வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு