verse 32 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 32 · கழையமல் கழனி

மாண்டனை பலவே போர்மிகு குருசில்நீமாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்முத்(து)உடை மருப்பின் மழகளிறு பிளிறமிக்(கு)எழு கடும்தார் துய்த்தலைச் சென்றுதுப்புத்துவர் போகப் பெருங்கிளை உவப்பஈத்(து)ஆன்(று) ஆனா விடன்உடை வளனும்துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபுநகொன்ஒன்று மருண்டனென் அடுபோர்க் கொற்றவநெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்பெருமலை யானையொடு புலம்கெட இறுத்துத்தடந்தாள் நாரை படிந்(து)இரை கவரும்முடந்தை நெல்லின் கழைஅமல் கழனிப்பிழையா விளையுள் நா(டு)அகப் படுத்துவையா மாலையர் வசையுநர்க்(கு) அறுத்தபகைவர் தேஎத்(து) ஆயினும்சினவாய் ஆகுதல் இறும்பூதால் பொ஢தே.
Share
கதை

கழையமல் கழனி

நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · செந்துறைப் பாடாண்பாட்டு