வாண்மயங்கு கடுந்தார்
நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · களவழி
வீயா யாணர் நின்வயி னானேதாவா(து) ஆகு மலிபெறு வயவேமல்லல் உள்ளமொடு வம்(பு)அமர்க் கடந்துசெருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்றுபனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன்யானை பட்ட வாள்மயங்கு கடும்தார்மாவும் மாக்களும் படுபிணம் உணீஇயர்பொறித்த போலும் புள்ளி எருத்தின்புன்புற எருவைப் பெடைபுணர் சேவல்குடுமி எழாலொடு கொண்டுகிழக்(கு) இழியநிலம்இழி நிவப்பின் நீள்நிரை பலசுமந்(து)உருஎழு கூளியர் உண்டுமகிழ்ந்(து) ஆடக்குருதிச் செம்புனல் ஒழுகச்செருப்பல செய்குவை வாழ்கநின் வளனே.
நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · களவழி