verse 39 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 39 · ஏவல் வியன்பணை

பிறர்க்(கு)என வாழ்திநீ ஆகல் மாறேஎமக்கில்என் னார்நின் மறம்கூறு குழாத்தர்துப்புத்துறை போகிய வெப்(பு)உடைத் தும்பைக்கறுத்த தெவ்வர் கடிமுனை அலறஎடுத்(து)எறிந்(து) இரங்கும் ஏவல் வியன்பனைஉரும்என அதிர்பட்டு முழங்கிச் செருமிக்(கு)அடங்கார் ஆர்அரண் வாடச் செல்லும்காலன் அனைய கடும்சின முன்பவாலிதின், நூலின்இழையா நுண்மயிர் இழையபொறித்த போலும் புள்ளி எருத்தின்புன்புறப் புறவின் கணநிரை அலறஅலந்தலை வேலத்(து) உலவை அம்சினைச்சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்(து)அவிர்இழை தைஇ மின்உமிழ்(பு) இலங்கச்சீர்மிகு முத்தம் தைஇயநார்முடிச் சேரல்நின் போர்நிழல் புகன்றே.-----
Share
கதை

ஏவல் வியன்பணை

நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · வாகை